பக்கம்:கீதைப்பாட்டு.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 கீதைப் பாட்டு பழையது. சுவையற்றது. அழுகியது. கெட்டுப்போனது. எச்சில், அசுத்தம்இத்தகைய உணவு தமோ குணமுடையோருக்குப் பிரியமானது. அபலாகாங்கூஷிபிர்-யஜ்ஞோ விதி-த்ருஷ்டோய இஜ்யதே யஷ்டவ்ய-மேவேதி மன:லமாதாய ஸ் லாத்விக: 11. விதிதெரிய வந்தவெது வேள்விபல னாசை விட்டவர்க ளானிஃது வேட்டற்கு மேயென் றதிகவன மேவிய மனத்தினுடன் வேட்ப தாயதது சத்துவ நிலாயது மிகத்தான். 507 பயனை விரும்பாதவர்களாய், வேள்வி புரிதல் கடமையென்று மனந்தேறி, விதிகள் சொல்லியபடி இயற்றுவாரின் வேள்வி சத்துவ குணமுடைத்து. அபிலந்த்தாய து பலம் தம்ப்பார்த்த-மபி சைவ யத் இஜ்யதே பரதச்ரேஷ்ட்ட தம் யஜ்ஞம் வித்தி ராஜலம் 12. பாரதர்க் கரசெது பலத்தொரு பற்று வைத்து மிடம்பமென் கார ணத்தினும் வேட்ப தோவதி ராசசத் ததெனத் தெரி. 608 பயனைக் குறித்தெனினும், ஆடம்பரத்துக் கெனினும் செய்யப்படும் வேள்வி ராஜச மென்றுனர் பாரதரிற் சிறந்தாய்! விதிஹீன-மஸ்ருஷ்டான்னம் மந்த்ரஹீன-மதகழினம் ச்ரத்தா-விரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசrதே 13. நியமியாது மந்திர மிலாதனம் நெறியிலாது தக்கணை யிலாததாய் உயர் சிரத்தையும் ஒழியும் வேள்விதான் உரைசெய் கிற்பர்தாம தமுடைத்தென. 609 விதி தவறியது. பிறர்க்குணவு தாராதது. மந்திர மற்றது. தrணையற்றது. நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது - இத்தகைய வேள்வியைத் தாமச மென்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/243&oldid=799807" இலிருந்து மீள்விக்கப்பட்டது