பக்கம்:கீதைப்பாட்டு.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 கீதைப் பாட்டு ந ஹி தேஹப்ருதா சக்யம் த்யக்தும் கர்மாண்-யசேஷத: யஸ்து கர்மபல-த்யாகீ ல த்யாகீத்-யபிதீயதே 11. உடலேய் பவனால் வினைசே டமிலா தொழிதற் கியலாத தன்னோ-வினையின் புடையே யெவனோ பயனோ வுமவன் புகலப் படுமம்ம தியாகியென. 535 மேலும் உடம்பெடுத்தவனால் செய்கைகளை முழுதுமே விட்டுவிட முடியாது. எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ அவனே தியாகி யெனப்படுவான். அனிஷ்ட-மிஷ்டம் மிச்ரஞ் ச த்ரிவிதம் கர்மன:பலம் பவத்-யத்யாகினாம் ப்ரேத்ய ந து லந்ந்யாலினாம் க்வசித் 12. வினைசெய்து விடல்செய் திலாருக் குவப்பும் வெறுப்புங் கலப்பும் மெனப்பட்ட முக்கூற் றினையுள்ள செயலின் பயனுண்டு விட்டார்க் கெதுபோது மவையுண் டெனப்பட்ட தில்லை. 536 வேண்டப்படாதது. வேண்டப்படுவது. இரண்டும் கலப்பானது என மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்களைத் தியாகிகளல்லாதோர் இறந்த பின்னர் எய்துகின்றனர். சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை. பஞ்சைதானி மஹாபாஹோ காரனானி நியோத மே லாங்க்க்யே க்ருதாந்தே ப்ரோக்தானி லித்தயே ஸ்ர்வ கர்மணாம் 13. அறிவின் வன்மையாற் செய்து கொண்முடி - பதிலெலா வினைகளும் விளைப்பதற் கறைதல் செய்த காரணமு மைந்திவை - யறிக வென்னிடன் பெரிய தோளனே. 637 - எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்குரிய காரணங்கள் சாங்கிய சாஸ்திரத்தில் ஐந்தாகக் கூறப்பட்டன. அவற்றை என்னிடம் கேட்டுனர், பெருந்தோளாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/253&oldid=799829" இலிருந்து மீள்விக்கப்பட்டது