பக்கம்:கீதைப்பாட்டு.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 கீதைப் பாட்டு விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் செய்யப்படும் மிகுந்த ஆயாசத்துக்கிடமான செய்கை ராஜச மெனப்படும். அனு-த்த்தம்-கடியம்-ஹிம்லா-மனபேகடிய ச பெளருஷம் மோஹா-தாரப்ப்யதே கர்ம யத்தத் தாமல-முச்யதே 25. செலவி னையிடை ஆற்றினை யுறுதுயரைத் திறலினை யாலோசனை புரியாத நிலையிலஞ் ஞானத் திாலெது கருமம் நிகழுவதது தாமத மெனல் கொளுமே. 649 செய்கையின் பின்விளைவையும், அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும். துன்பத்தையும் செய்வானது திறமையையும் கருதாமல், அறிவின்மையால் தொடங்கப்படும் கர்மம் தாமச மெனப்படும். முக்தலங்கோsனஹம்-வாதி த்த்ருத்-யுத்லாஹ-ஸ்மன்வித: லித்த்யலித்த்யோர்-நிர்விகார: கர்த்தா-லாத்விக உச்யதே 26. தொடர்விட் டியானென்று சொல்லாது தீரத் தொடுகூடி யுற்சாக முடனே கிடைத்தல் கிடையாமை யானே விகாரம்மில் கர்த்தன் கிளக்கப் படுஞ்சத் துவத்துள்ள னென்றே. o 550 நசைகளற்றான். நானென்பதற்றான். உறுதியுங் களிதரும் ஊக்கமு முடையான். வெற்றி தோல்வியில் வேறுபாடற்றான் - இங்ங்னமாகித் தொழில்களியற்றுவோன் ஒளியியல் புடையா னென்ப. ராகீ கர்மபலப்ரேப்லர்-லுப்த்தோ ஹிம்லாத்ம கோsசுசி: ஹர்ஷசோகான்வித கர்த்தா ராஜல: பரிகீர்த்தித: 27. பெட்டலுளன் கன்மபலன் பேணின னுலுத்தன் பிறரையிடர் செய்யு மியல்புள்ள வனசுத்தன் உட்டுயர் மகிழ்ச்சியிவை தொட்டுள கருத்தன் உரைபெறுவ னாவனிர சோகுன முளனா. 551 வேட்கை யுடையோன், செய்கைப் பயன்களை விரும்புவோன். லோபி, இடர் செய்வோன். தூய்மை யற்றோன். களிக்குந் துயிலுக்கும் வசப்பட்டோன்-இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர். ཟཟ་ཟླ = அயுக்த: ப்ராக்ருத: ஸ்தப்த்த சடோ நைஷ்க்ருதி கோsலல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/257&oldid=799837" இலிருந்து மீள்விக்கப்பட்டது