பக்கம்:கீதைப்பாட்டு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கீதைப் பாட்டு "சுனைவாய்ச் சிறுநீரை எய்தாது என்றுஎண்ணிப் பிணைமான் இனிதுஉண்ண வேண்டி - கலைமாத்தன் கள்ளத்தின் ஊச்சும் கரம்என்பர் காதலர் உள்ளம் படர்ந்த நெறி" (ஐந்திணை ஐம்பது) ஆண்மான் தன் இணையான பெண்மானுக்காகச் செய்யும் தியாகம் மிக அழகாக விளக்கப்பட்டுள்ளது. சிறிய அளவில் உள்ள தண்ணீரைத் தான் குடிப்பது போல் பாவனை செய்கிறதாம். பிணையும் அதை நம்பி முழு நீரையும் குடித்து விடுகிறதாம். விலங்கிற்கே இவ்வளவில் அன்பு இருந்தால் மனிதர்க்கு எம்மட்டில் இருக்கும்? இது போல் சொல்லிக் கொண்டே போகலாம். இவர் சுதந்திரமான சிந்தனையாளர். விஞ்ஞான பூர்வமான தமிழாராய்ச்சிக்கு வழி வகுத்தவர். மாற்றுக் கருத்துக்கு மதிப்புக் கொடுத்து. அதைப் பலரறிய ஒத்துக் கொள்ளும் பெரும் உள்ளம் உண்டு. நச்சினார்க்கினியர் உரையை மறுக்கும் அதே நேரத்தில், புது மாணாக்கர்களின் கருத்துக்கு மதிப்பும் தருவார். சமரச சன்மார்க்கவாதி, பிறப்பில் வைணவ அந்தணராயினும், ஆண்டுதோறும் சைவ சிந்தாந்தக் கழகச் சொற்பொழிவுகளில் சைவ சமயக் குரவர்களின் பேரிலக்கியத்தைப் புகழ்வார். தானம், தயை, தபஸ் என்ற மூன்றும் இஸ்லாமிய அன்பர்களின் பெருநாள் நோன்பில் எவ்வாறு வெளிப்படுகிறது என்று காட்டுவார். தேம்பாவணி போன்ற கிறிஸ்துவ இலக்கியத்தைப் பெரிதும் பாராட்டுவார். எல்லாவித உண்மைகளைவும், எங்கிருந்தாலும் அறியும் ஆர்வம் இருந்தது. வாழ்க்கையில் வறுமையால் பன்முறை அல்லற்பட்ட பொழுதும் ஆராய்ச்சியையும், பதிப்பித்தலையும் விட்டதே இல்லை. வேடிக்கை யாகப் பகவானே மகாபலியிடம் மூன்றடி மண் யாசித்த பொழுது உடல் குறுகி பிறந்தவர்களே நகையாடும்படியான தோற்றத்தில் வாமனனாய் அமைந்தான் என்றால் சாதாரண மனிதர்கள் எவ்வளவு கூனிக் குறுக வேண்டும் என்று கூறிக் கம்பராமாயணத்தில் அப்பகுதியைக் காட்டுவார். தம்மைப் புரந்த சேதுபதி மன்னர்களையும். இராஜா சர். அண்ணாமலைச் செட்டியாரையும், கம்பன் சடையப்ப வள்ளலைப் புகழ்ந்தது போல் கவிபாடி நன்றிக் கடனைத் தீர்த்தார். பெண்களிடமும், பெண்கல்வியிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/26&oldid=799844" இலிருந்து மீள்விக்கப்பட்டது