பக்கம்:கீதைப்பாட்டு.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசடி சந்யாச யோகம் 261 சமோ தமஸ்-தப: செளசம் கூடிாந்தி-ரார்ஜவ-மேவ ச ஜ்ஞானம் விஜ்ஞான-மாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபா வஜம் 42. பொறி யொடுங்குவது மன னடங்குவது பொறை தவஞ்சுசி பொய்யாநிலை அறிதன் மேலறிதல் மறைமெய் யென்றனமறை யவர்களுக் கியல்பினாம் வினை. 555 அகக் கரணத்தை யடக்குதல், புறக் கரணத்தை யடக்குதல், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம், கல்வி, ஆத்திகம் இவை இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும். செளர்யந் தேஜோ த்த்ருதிர்-தாகூடியம் யுத்தே சாப்ய பலாயனம் தான-மீச்வரபாவச்ச கூடிாத்ரம் கர்ம ஸ்வபாவஜம் 43. தயிரியம் விரகு சவுரியம் மொளியெத் தருணமுஞ் சமரி னடிபினிடாமை இயல்வது தருத லீச்சுர நீர்மை இறையவ ரியல்பின் வருவினை யாகும். 557 சூரத்தன்மை ஒளி, உறுதி. திறமை, போரில் புறங்காட்டாமை, ஈகை, இறைமை - இவை இயற்கையிலே தோன்றும் கூடித்திரிய கர்மங்களாம். க்ருஷ-கெளரகஷ்ய-வாணிஜ்யம் வைச்யகர்ம ஸ்வபாவஜம் பரிசர்யாத்மகங் கர்ம சூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம் 44. பயிர்விளைத்தல் பசுவினை யளித்தல் பல பண்டம் விற்றல் கொளல் செய்தல் தாம் வயிசியப் பிறவி யுடையருக் கியல்பின் வருவதற்குரிய கருமமாம். புரிபணி விடையின் னுருவுள வினைசூத் திரனிடனுந்தன் னில்பினில் வருமே. GHE உழவு. பசுக் காத்தல், வாணிகம் இவை இயற்கையிலே பிறக்கும் வைசிய கர்மங்களாம். தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையால் ஏற்பட்ட தொழில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/262&oldid=799850" இலிருந்து மீள்விக்கப்பட்டது