பக்கம்:கீதைப்பாட்டு.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசடி சந்யாச யோகம் 265 யான் எவ்வளவுடையேன். யாவன், என என்னை யொருவன் உள்ளபடி பக்தியாலேயே அறிகிறான். என்னை உள்ளபடி அறிந்துகொண்ட பின்னர் 'தத் அது எனப்படும் பிரம்மத்தில் புகுவான். லர்வகர்மாண்யபி லதா குர்வானோ மத்-வ்யபாச்ரய: மத்-ப்ரலாதா-தவாப்னோதி சாச்வதம் பதமவ்யயம் 56. எனையடைந் தெலா வினையு மெந்தவே ளையுமியற்றுவோ னெனத ருட்படிக் கினைவ தில்லதாய் நிலைவ தேதனா தியல்ப தாகுமே லிடனை யெய்துமே. 58C) எல்லாத் தொழில்களையும் எப்போதும் செய்துகொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டோன் எனதருளால் அழிவற்ற நித்திய பதவியை எய்துகிறான். சேதலா லர்வகர்மாணி மயி ஸ்ந்ந்யஸ்ய மத்பர: புத்தியோக-முபாச்ரித்ய மச்சித்த: லததம் பவ 57. மதியோக மடைந்தறி வால் வினையா வையு மென்னிடன் விட்டெனையே பரமா மதிசெய்தெது போழ்தினு மற்றெனிடன் மதியைத் தனிவைத்தவ னாகுகவே. ČHET அறிவினால் செயல்களை யெல்லாம் எனக்கெனத் துறந்து விட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று. எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு. மச்சித்த ஸர்வதுர்க்காணி மத்ப்ரலாதாத்-தரிவிடியலி அத சேத் த்வ-மஹங்காராந் ந ச்ரோஷ்யலி விநங்கூடியலி 58. என்கண்மதி வைத்தவ னாகியெலா இடருந் நனி தாவுவை யென்னருளாற் பின்னுள்ள தகந்தையி னாலிதுநீ பேனற்கிலை யென்னி னொழிந்தனையால். 6.82 என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் என தருளால் கடந்து செல்வாய் அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயெனில் பொபநாசத்தை அடைவாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/266&oldid=799859" இலிருந்து மீள்விக்கப்பட்டது