பக்கம்:கீதைப்பாட்டு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் அறிமுகம் 25 பெருமதிப்பு வைத்தவர். சங்க இலக்கியத்தில் கண்ட பெண் புலவர்களை “நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்” என்ற நூலை எழுதி உலகக்கு அறிவித்தார். இவர் சிறந்த நாவலர். மகாவித்வான் என்ற பட்டம் தமிழ்த்தாத்தா உவே. சாமிநாதையரால் அளிக்கப்பட்டது. வடமொழி அன்பர்கள் நிறைந்த சமஸ்கிருத சமிதி “பாஷா கவிசேகரர்” பட்டம் அளித்துக் கெளரவித்தது. மூன்று சோழப் பேரரசர்கள் அவையில் ஆஸ்தான வித்துவானாக இருந்த ஒட்டக்கூத்தன் போல் இவரும் மூன்று சேதுமன்னர்கள் அவைப்புலவராக அமைந்தார். சங்ககாலக் குறுநில மன்னர்களான வேளிர், கோசர் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இவருடைய சுதந்திரமான தனிவழிப்பாதை காண்பதில் உள்ள ஆர்வத்தைப் புலப்படுத்தும். தித்தன் வேளிர் குறுநில மன்னன். வஞ்சியருகில் வதிந்தவன் என்பதைச் சமீபத்தில் கருவூர் அமராவதிப் படுகையில் கிடைத்த தித்தன் பெயர் பொறித்த நாணயம் வலியுறுத்தும். கோசர் வேளிரை அடுத்துத் தமிழ்நாடு வந்தவர். கோசர் புத்தூர் பின்பு கோயம்புத்தூர் எனத் திரிந்தது. வேளிர் காச்மிர நாட்டிலிருந்து மிகப் பழைமையான காலத்தில் தமிழ்நாடு போந்தவர். பொருநராற்றுப் படைத் தலைவன் கரிகாலன். பட்டினப்பாலைத் தலைவன் திருமாவளவன் என்றும் இன்னோரன்ன புதிய செய்திகளை வெளியிட்டவர். இவற்றில் சில காலத்தால் வேறுபடலாம். பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை. புலவர் ம்ணி பதிப்புச் செம்மல்’, ‘செந்தமிழ்ச்செம்மல்" என்னும் விருதுகளைப் பெற்றவர். சென்னை, மதுரை, தஞ்சை பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தவர். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையிடம் பதிப்பு முறைகளை அறிந்தவர். பல நூல்களைப் பதிப்பித்தவர். என் தந்தையார் இராமாநுஜையங்கார் காலம் முதல் எங்கள் குடும்பத்தின் ஒருவராக கருதத்தக்கவர். மகாவித்துவான் நூல்களைப் பதிப்பிப்பதில் பேரார்வம் உடையவர். சென்ற ஆண்டு என் பாட்டனார் மகாவித்துவான் ரா. இராகவையங்காரின் இதுவரை அச்சில் வாராத நூற்படிகளை எல்லாம் ஒப்படைத்து. அவை அச்சில் வர ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டேன். இன்கவித் திரட்டு என்னும் நூலைச் சென்ற ஆண்டு வெளியிட்டு உதவினார். இப்பொழுது பாரதி புத்தகாலயத்தாரைக் கொண்டு கீதைப் பாட்டு என்னும் இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/27&oldid=799865" இலிருந்து மீள்விக்கப்பட்டது