பக்கம்:கீதைப்பாட்டு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ஜுன விஷாத யோகம் 49 நிமித்தானி ச பச்யாமி விபரீதானி கேசவ! ந ச ச்ரேயோsனுபச்யாமி ஹத்வா ஸ்வஜன-மாஹவே 31. கேசவ நிமித்தமென லாயபல வுந்தாங் கேடுகுறி செய்வவிழி யூடுதெரி வேனால் பூசல்விளை யுங்கள னிடைத்தம ருளாரைப் பொன்றுவது செய்வதினொர் நன்றுமறி யேனே. 31 கேசவா, விபரீதமான சகுனங்கள் பல காண்கிறேன். போரிலே சுற்றத்தார் களை மடிப்பதில் எனக்கு நன்மை தோன்றவில்லை. ந காங்கூேடி விஜயங் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகானி ச கிந்நோ ராஜ்யேன கோவிந்த கிம் போகைர் ஜிவிதேன வா 32. அரசுஞ் சுகத்தோ டவாவேன் வெலல்வேண் டலனாவல் கோவிந்த நலநாம கண்ண தரையாள்வ தாலென் சுகத்தாலென் வாழ்வு தன்னானு மேயாக என்னா நமக்கே. 32 கண்ணா. நான் வெற்றியை விரும்புகிலேன் ராஜ்யத்தையும், இன்பங் களையும் வேண்டுகிலேன். கோவிந்தா, நமக்கு ராஜ்யத்தால் ஆவதென்? இன்பங்களால் ஆவதென் உயிர் வாழ்க்கையாலேனு மாவதென்னே?” யேஷாமர்த்தே காங்கூஷிதந் நோ ராஜ்யம் போகா: ஸ்கைானி ச த இமேSவஸ்த்திதா யுத்தே ப்ராணான்ஸ்-த்யக் த்வா தனானி ச 33. எவர்க்காக யாம்ராச போகம் சுகம்வேண் டினமாவ மின்னோர் தனந்தம்ம தோடு தவத்தம் பிராணன் னெனத்தக்க வற்றைத் தனிவிட் டமர்க்கட் சமைந்தே யமர்ந்தார். 33 யாவர் பொருட்டு நாம் ராஜ்யத்தையும் போகங்களையும் இன்பங்களை யும் விரும்புகிறோமோ, அவர்கள் உயிரையும் செல்வங்களையும் துறந்தோராய் இங்கு வந்து நிற்கிறார்கள். ஆசார்யா பிதர: புத்ராஸ்-ததைவ ச பிதாமஹா: மாதுலா: ச்வசுரா: பெளத்ரா: ஸ்பாலா லம்பந்தி னஸ்-ததா 34. ஆசாரியர் தாதையர் புத்திரரங் ங்னமேய பிதாமகர் மாதுலர்கள் மாசாலர்கள் பேரர் மகட்டருவோர் மருவும் முறவாளரு மப்படியே. 34 குருக்களும். தந்தையரும், மக்களும், பாட்டன்மாரும். மாதுலரும், மாமன்மாரும். பேரரும், மைத்துனரும். சம்பந்திகளும், இங்குளர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/50&oldid=799928" இலிருந்து மீள்விக்கப்பட்டது