பக்கம்:கீதைப்பாட்டு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கீதைப் பாட்டு ஏதாந் ந ஹந்து-மிச்சாமி க்னதோSபி மதுல9தன அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ: கிந் நு மஹீக்ருதே 35. என்னைமது சூதன கொலப்புகுவ ரேனு மீண்டுலக மூன்றரசி னேதுவிது வேனும் இன்னவரை யானுமெதிர் கொல்லவிழை கில்லேன் இச்சிறும ணெய்தவஃ தென்னைபுரி வேனோ, 35 மதுசூதனா, யான் கொல்லப்படினும் இவர்களைக் கொல்ல விரும்புகிலேன். மூவுலகின் ஆட்சி பெறுதற்கெனினும் இது செய்யேன்) பூமியின் பொருட்டுச் செய்வனோ? நிஹத்ய தார்த்தராஷ்ட்ராந் ந: கா ப்ரீதி: ஸ்யாஜ்-ஜனார்த்தன பாபமேவாச்ரயே-தஸ்மான் ஹத்வைதா-னாததாயின்: 36. ஏதுதான் விழைவினைச் செய்யுமோ திருதராட் டிரன்மகா ரினைவதிப் பதுசநார்த் தனவெமக் காததா யிகளெனா வுளவினோர் தமையெதிர்ந் தடுதலா னமையறங் கடையுமே யடையுமே. 36 ஜநார்த்தன. திருதராஷ்டிரக் கூட்டத்தாரைக் கொன்று நாம் என்ன இன்பத்தை யடையப் போகிறோம்? இந்தப் பாதகரைக் கொல்வதானால் நம்மைப் பாவமே சாரும். தஸ்மாந்-நார்ஹா வயம் ஹந்தும் தார்த்தராஷ்ட்ரான் ஸ்வபாந்தவான் ஸ்வஜனம் ஹி கதம் ஹத்வா ஸுகின: ஸ்யாம மாதவ 37. சுற்றத் தொடுந்திருத ராட்டிரன் மகாரைத் துணித்தற் கிதாலுரிய மில்லையல மேயாம் மற்றுற்ற நந்தமரை யட்டபினெவ் வாறு மாதவநல் வாழ்வுடைய மாதுமென லாமே. 37 ஆதலால், சுற்றத்தாராகிய திருதராஷ்டிர வர்க்கத்தாரைக் கொல்வது நமக்குத் தகாது. மாதவா. பந்துக்களைக் கொன்றபின் நாம் இன்புற்றிருப்பதெப்படி? - யத்யப்யேதே ந பசயந்தி லோபோபஹத-சேதல: # குல கூடியக்ருதந் தோஷம் மித்ரத்ரோஹே ச பாதகம் 38. குடிதீய விளைகுற்ற முதுநட்பின் வஞ்ச வினைகூர் பாவமிப் பிடிவாத லோபத்தி னழிநெஞ்சர் தேறப் பெறாரேனுமென். 3S அவாவின் மிகுதியால் அறிவிழந்த இவர்கள் குலத்தையழிப்பதில் விளையும் தீங்கையும். நண்பருக்குச் சதி செய்வதிலுள்ள பாதகத்தையும் காண்கிலராயினும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/51&oldid=799929" இலிருந்து மீள்விக்கப்பட்டது