பக்கம்:கீதைப்பாட்டு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ஜுன விஷாத யோகம் 53 யதிமா-மப்ரதீகாரம் அசஸ்த்ரம் சஸ்த்ரபாணய: தார்த்தராஷ்ட்ரா ரனே ஹன்யுஸ்-தன்மே கூேடிம தரம் பவேத் 46. திடமு டைப்படை யுடைய கையினர் திருத ராட்டிரன் மக்கடாம் படைவி டுத்தெதி ராவெ னைக்கள னடினெ னக்குயர் நலமதாம். 46 கையிலாயுதமில்லாமல், எதிர்க்காமல் நிற்குமென்னை இந்த திருதராஷ் டிரக் கூட்டத்தார் ஆயுதபாணிகளாய்ப் போரில் மடித்துவிடினும் அது எனக்குப் பெரிய நன்மையேயாம். o ஏவமுக்த்வா அர்ஜூன: லங்க்யே ரதோபஸ்த உபாவிசத் விஸ்ருஜ்ய லசரம் சாபம் சோக-லம்விக்ன-மானல: 47. இடர்வ ருத்துமன மொடுக ளத்தினிடை யிவையுரைத்து பினரர்ச்சுனன் தொடுக ணைச்சிலையை நழுவ விட்டிரத நடுவி ருப்பது செய்தானரோ, 47 சஞ்ஜயன் சொல்லுகிறான் : செருக்களத்தில் இவ்வாறு சொல்லிவிட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப் பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான். முதலாம் அத்தியாயம் நிறைவேறியது. ( கீதைப் பொருட்டகை ) நள்ளா விடத்துச்செய் நண்பாற் கருணையினாற் றள்ளா வறத்தைமறந் தானாகக் - கொள்பயத்தாற் சஞ்சலித்துத் தற்சேர் தனஞ்சயனை நோக்கியிறை செஞ்சொலவ தாரஞ் செயும். (5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/54&oldid=799932" இலிருந்து மீள்விக்கப்பட்டது