பக்கம்:கீதைப்பாட்டு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதைப் பாட்டு (இரண் டாம் அத்தியாய ம்) ஸாங்கிய யோகம் (ைேத இயற்பொருள் விளக்கம்) இரண்டெனிய னித்தமுயி ரின்கணிலை யுள்ளந் தெருண் டுவளர் சாங்கியமெனுந் திறல்கொள் புத்தி இருண்டயசை யற்றகன்ம யோகமெனும் புத்தி மருண்டவர் தெளிந்துகொள வாய்மொழிவ தாகும். போர்புரிய மனம் வராமல் திகைத்துத் தன்னைச் சரணடைந்த அர்ஜுனனை நோக்கிக் கண்ணன் உரைக்கின்றான் : -"அர்ஜுனா, நீ வருந்துவது முற்றிலும் தவறு. எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி வருந்துகின்றாயா, அல்லது அவர்களின் உடலைப் பற்றி வருந்துகின்றாயா? இரண்டும் சரியல்ல. ஆன்மா என்றும் அழிவற்றது. அதைக் கத்தியால் வெட்டவும் தீயினால் எரிக்கவும் முடியாது. உடலோ அழியும் இயல்பு வாய்ந்தது. நீ அழிக்காவிடினும் அதுதானே அழிய வேண்டியதுதான். ஆன்மாவுக்கு ஒருடல் அழிந்ததும், மற்றொருடல் தானே வந்து சேரும். ஆத்மாவின் இயற்கையை எண்ணி உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீரவேண்டும். அச்செயல்களைச் செய்யுங்கால், நாம் செய்யவேண்டியதைச் செய்கிறோம். அதுவும் ஈசுவரப் பிரிதிக்காகவே, என்று எண்ணிச் செய். இதனால் ஆத்மஞானம் பெருகி அதில் நிலை பெற்று நற்கதியடைவாய். ஈசுவரப் பிரிதியைத் தவிர மற்ற பலனைக் கோரினால் சம்சாரக் கட்டிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/55&oldid=799933" இலிருந்து மீள்விக்கப்பட்டது