பக்கம்:கீதைப்பாட்டு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 கீதைப் பாட்டு அர்ஜுன உவாச : கதம் பீஷ்ம-மஹம் ஸங்க்யே த்ரோனஞ்ச மதுல9தன இவடி-பி: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரில9தன 4. வென்றுபகை கொன்றமது சூதன நன்னாம வீடுமர்து ரோனர் வழிபாடுதகு வாரை நன்றிரண பூமியிடை நின்றுகணை கொண்டு நானுமெதிர் தந்திகலெவ் வாறுபுரி வேனோ. 51 அர்ஜூனன் சொல்லுகிறான் : மதுசூதனா. பீஷ்மனையும், துரோணனையும் போரில் அம்புகளால் எப்படி எதிர்ப்பேன்? இவர்கள் தொழுதற்குரியர் பகைவரை யழிப்போய்! குரு-னஹத்வா ஹி மஹானுபாவான் ச்ரேயோ போக்தும் பைகஷ்ய-மபீஹ லோகே ஹத்வார்த்த-காமாம்ஸ்து குரு-னிஹைவ புஞ்ஜியடோகான் ருதிர-ப்ரதிக்தான் 5. பெருக்குமகி மைக்குரவ ரைக்கொலைசெ யாதே பிச்சையுணி னும்புவியிதிற் பெருமை யன்றோ அருத்திபொரு எளிற்செய்குர வோர்கொலைசெய் தன்னார் அரத்தமெழு குஞ்சுகம ருந்தலெவ னிங்கே 52 பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல். உலகத்தில் பிச்சையெடுத்துண்பதும் நன்று. பொருளை விரும்பும் குருக்களைக் கொன்று நாம் துய்க்கும் இன்பங்கள் உதிரத்திற் ரத்தத்தில் கலந்தனவாம். நசைதத் வித்ம: கதரந்நோ கரீயோ யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு: யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ்தேவஸ்த்திதா: ப்ரமுகே தார்த்தராஷ்ட்ரா: f யாம்வெல் லுதுமோ வெமைவெல் லுவரோ எதுமே லறியே மிவிரண் டுளெமக் கியாமே வரைவென் றிவண்வா முவெனேம் எதிர்நின் றுணர்நம் முதிர்தந் தைமகார். 53 மேலும், நாம் இவர்களை வெல்லுதல். இவர்கள் நம்மை வெல்லுதல் - இவற்றுள் எது நமக்கு மேன்மையென்பது விளங்கவில்லை. எவரைக் கொன்றபின் நாம் உயிர்கொண்டு வாழ விரும்போமோ. அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் போர் முனையில் வந்த நிற்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/57&oldid=799935" இலிருந்து மீள்விக்கப்பட்டது