பக்கம்:கீதைப்பாட்டு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L} கீதைப் பாட்டு எல்லாராலும் போற்றிக் கற்கப்படுவது. இதனைப் பக்தர்கள் நியமமாகப் பாராயணம் செய்து வருவதும் உண்டு. தமிழில் திருக்குறள் போன்று வடமொழியில் சிறப்பாகப் போற்றப் பெறும் ஞானநூல் பகவத்கீதை. இந்நூலும் உலகில் பற்பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றுப் பலரும் படித்துப் போற்றி வருகின்றனர். 'தொல் ஆணை நல்ஆசிரியர் புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருவின் நெடியோன்' எனவரும் 'மதுரைக்காஞ்சி யடிகளின் 761-763) உரையில் கீதை அரு ளிச் செய்த நிகழ்ச்சி புலப்படும் என்கிறார் நச்சினார்க்கினியர். 'எல்லா நிலத்தையும் தன்னிடத்தேகாட்டின பெருஞ் செல்வத்தையுடைய மாயோனைப் போலத் தொல்லாணையை உடைய நல்லாசி ரியர் என்றது, கண்ணன் எப்பொருளும் தானாயிருக்கின்ற படியைக் காட்டி பூரீகீதை அருளிச் செய்து எல்லாரையும் போதித்தாற் போலப் போதிக்க வல்ல ஆசிரியர்' என்பது அவர்தம் விளக்கம். ஆசிரியருடைய போதனைக்குக் கீதையை இவர் எடுத்துக் காட்டுதலால் அதன் சிறப்பு விளங்கும். 'வியாசர் இயற்றிய ஒரு லக்ஷம் சுலோகங்களையுடைய மஹா பாரதத்திலே பீஷ்ம பருவத்தில், பிரம வித்தையைப் புலப்படுத்துவதும், யோக சாஸ்திர மானதும், பூரீ கிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளது பகவத்கீதை என்னும் உபநிஷத் என்று குறிக்கப்படுகிறது. பாரதியார் தம்முடைய கீதை மொழிபெயர்ப்பில், உபநிஷத்தும் பிரம்மவித்தையும் யோக சாஸ்திரமும் பூரீ கிருஷ்ணார்ஜுன சம்பாஷணையுமாகிய பூரீமத் பகவத் கீதை' என்று அத்தியாயந் தோறும் இறுதியில் தெரிவிக்கிறார். பூரீ சங்கராச்சாரியர், பூரீ இராமாநுஜர், பூரீ மத்வாச்சாரியர் முதலியோரால், பாஷ்யம் (விரிவுரை வழங்கப் பெற்ற பெருஞ் சிறப்பினைப் பெற்றது இந்நூல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/6&oldid=799938" இலிருந்து மீள்விக்கப்பட்டது