பக்கம்:கீதைப்பாட்டு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை 7 உபநிஷதங்கள். பிரம்ம சூத்திரம், பகவத் கீதை ஆகிய மூன்றும் "பிரஸ்தானத்திரயம் முடிவான பிரமாணமாக அமைந்த மூன்று என்று போற்றப்படுகின்றன. பகவத் கீதைக்குத் தமிழிலே பாடல்களாகவும் உரைநடையாகவும் பல மொழி பெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. உரைநடை மொழி பெயர்ப்புகளுள் இனிமையும் எளிமையுமான விளக்கமான மொழிபெயர்ப்பு மகாகவி சுப்பிரமணிய பாரதியாருடையதே. பாரதியார் தம் மொழி பெயர்ப்பு நூலுக்கு அருமையான விரிவான முன்னுரை தந்திருக்கிறார். அதில் கீதையின் சாரம் குறித்து அவர் எழுதியுள்ள பகுதி வருமாறு: “ஈசனைச் சரணாகதியடைந்து இகலோகத்தில் மோட்ச சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக் களியில் மூழ்கி வாழும்படி வழிகாட்டுவதே பகவத் கீதையின் முக்கிய நோக்கம். ஆதலால், இஃது கர்ம சாஸ்திரம், இஃது பக்தி சாஸ்திரம். இஃது யோக சாஸ்திரம், இஃது ருான சாஸ்திரம், இஃது மோகூடி சாஸ்திரம். இஃது அமரத்துவ சாஸ்திரம். “உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதே எனில், மாறுதல் மாயையின் இயற்கை. மாயை பொய் இல்லை. அது கடவுளின் திருமேனி. இங்குத் தீமைகள் வென்றொழித்தற்கு உரியன. நன்மைகள் செய்தற்கும் எய்துதற்கும் உரியன. சரணாகதியால் கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். சத்ய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத் தன்மை அடைவீர்கள். இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது.” இந்தக் கீதைப்பாட்டு' என்னும் கீதைத் தாழிசை நூலினை ஆக்கியவர் சேது சமஸ்தான மகாவித்துவான் பாஷா கவிசேகரர். ரா. இராகவையங்கார். இவர் தமிழ், வடமொழிக் கடலைக் கடந்து கரை கண்டவர். இப்பேராசிரியர் சிறந்த மொழி பெயர்ப்பாசிரியருமாவர். வடமொழியிலுள்ள வால்மீகி ராமாயணத்தில் சில பகுதிகளையும், இரகு வம்சத்திலுள்ள சில சருக்கங்களையும் தாழிசைப் பாவில் மொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/7&oldid=799949" இலிருந்து மீள்விக்கப்பட்டது