பக்கம்:கீதைப்பாட்டு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எபாங்கிய யோகம் 7| உனது புத்தி மோகக் குழப்பத்தைக் கடந்து செல்லுமாயின், அப்போது கேட்கப்போவது கேட்கப்பட்டது என்ற இரண்டிலும் உனக்கு வேதனையேற்படாது. ச்ருதிவிப்ரதிபன்னா தே யதா ஸ்த்தாஸ்யதி நிச்சலா ஸ்மாதாவசலா புத்திஸ்-ததா யோக-மவாப்ஸ்யலி 53. உன்றன் னிதயத் துறுகேள் வியினா லுறுதிப் படலா யொருதன் மையதாய் என்றெய் துவைபுத் திசலிப் பிலதா யன்றெய் துவையா குவையோ கமதை. IԱՍ உனது புத்தி கேள்வியிலே கலக்கமுறாததாய், உறுதிகொண்டு, சமாதி நிலையில் அசையாது நிற்குமாயின், அப்போது யோகத்தை அடைவாய். அர்ஜுன உவாச : ஸ்த்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸ்மாதிஸ்த்தஸ்ய கேசவ ஸ்த்திததி: கிம் ப்ரபாஷேத கிமாஸித வ்ரஜேத கிம் 54. நிலையாய சமாதிகொ னிட்டையிலே நிலையாய நினைப்பி னவற்கெது பேர் நிலையா மறிவோ னெதையோ துமெதை நினைவா னெதையெய் துவன்கே சவனே. 101 அர்ஜூனன் சொல்லுகிறான் : கேசவா. உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்? ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்? எப்படி யிருப்பான்? எதனை யடைவான்? ப்ரஜஹாதி யதா காமான் ஸர்வான் பார்த்த மனோகதான் ஆத்மன் யேவாத்மனா துஷ்ட ஸ்த்திதப்ரஜ்ஞஸ் - ததோச்யதே 55. நின்றுயிரை யேநினையு நெஞ்சின்மகிழ் வோனாய் நெஞ்சு புகு காமமுழு துந்தொலைவ தென்றோ அன்றுநிலை யாயவுனர் வொன்றியவ னென்ன + அப்பெயர் சொலற்குரிய னற்பிருதை மைந்த 702 பரீ பகவான் சொல்லுகிறான் : பார்த்தா. ஒருவன் தன் மனதில் எழும் விருப்பங்களனைத்தையும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின், அப்போது ஸ்திர புத்தியுடைய வனென்று சொல்லப்படுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/72&oldid=799952" இலிருந்து மீள்விக்கப்பட்டது