பக்கம்:கீதைப்பாட்டு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கீதைப் பாட்டு து:க்கேஷ்வனுத்விக்னமனா: லகேஷவிகத-ஸ்ப்ருஹ: விதராகபயக்ரோத ஸ்த்திததீர்-முனிருச்யதே 56. துயரினசை யாத மனமுடைய னாகிச் சுகநசை யுறாது விழைவொடு குரோதம் பயமிவைகள் போகி மனனமுள னானோன் பகர்தல்பெறு வானா னிலையுமறி வோனா I03 துன்பங்களிலே மனங்கெடாதவனாய், இன்பங்களிலே ஆவலற்றவனாய், அச்சமும் சினமுந் தவிர்த்தவனாயின், அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவனென்ப. ய: லர்வத்ராநபிஸ்நேஹஸ் தத்தத் ப்ராப்ய சுபாசுபம் நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்ட்டிதா 57. எவனெ வற்றினும் மதிக நண்பிலான் எதுசு பாசுபம் மடைய வும்மகிழ் பவன்வெ றுப்பவன் னெனவி லன்னவன் அறிவ ரோதிட நிலைய டைந்ததே. |[]-. எவன் நல்லதும் கெட்டதும் வருமிடத்தே எதனிலும் வீழ்ச்சியற்றவனாய், ஆவலுறுவதும் பகைப்பதுமின்றி யிருப்பானோ. அவனுடைய அறிவே நிலை கொண்டது. யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோங்காணிவ ஸ்ர்வச: இந்த்ரியாணிந்த்ரியார்த்தேப்யஸ்-தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்ட்டிதா 58. எப்போது புலங்க டொடும் பொறிக ளிவனாமை யுறுப்பி னெலா வகையும் அப்போது சுருக்குவ னோவவனுக் கறிவோர் நிலையாக வமர்ந்ததுவே ני,יו ஆமை தன் அவயங்களை இழுத்துக் கொள்ளுவது போல், எட்டத்தும் விஷய பதார்த்தங்களினின்று புலன்களை யொருவன் மீட்க வல்லானா யின் அவனறிவே நிலைகொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/73&oldid=799953" இலிருந்து மீள்விக்கப்பட்டது