பக்கம்:கீதைப்பாட்டு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான யோகம் 93 ஆதி பகவானுவாச : இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவா-னஹ-மல்யயம் விவஸ்வான் மனவே ப்ராஹ மனு-ரிகடிவாகவேSப்ரலித் 1. நான்வி வச்சு வாவுக் குரைத்தனன் நாச மற்றதோர் யோக மற்றிதை ஈன்வி வச்சுவா சொற்ற னன்மதுக் கிக்கு வாகுவுக் கோதி னன்மது. 153 புரு பகவான் சொல்லுகிறான் : இந்த அழிவற்ற யோகத்தை நான் முன்னர் விவஸ்வானுக்குச் சொன்னேன். விவஸ்வான் மனுவுக்குச் சொன்னான். மனு இகஷ்வாகு ராஜனுக்குக் கூறினான். ஏவம் பரம்பரா-ப்ராப்த-மிமம் ராஜர்ஷயோ விது: ல காலேனேஹ மஹதா யோகோ நஷ்ட பரந்தப 2. பரம்பரையி னிவ்வனம டைந்தவிதை ராச பரம்பரையி லேயிருடி யாயினர்தெ ரிந்தார் பரந்தப விவண்புவியி லேநெடிய காலம் பட்டொழிய யோகமது கெட்டதுமன் மாதோ T64 இவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த இதனை ராஜரிஷிகள் உணர்ந்திருந்தனர். பரந்தபா, அந்த யோகம் கால மிகுதியால் இவ்வுலகத்தில் இழக்கப்பட்டது. ல ஏவாயம் மயா தே Sத்ய யோகப்ரோக்த:புராதன: பக்தோsலி மே லகள் சேதி ரஹஸ்யம் ஹ்யேத-துத்தமம் 3. அப்பழைய தாகியுள யோகமிது வேயெற் கன்புடையை தோழமையு முள்ளையென வென்னால் இப்பொழு துனக்குரை விரித்துதவ லாயிற் றித்தகைய துத்தம மறைப்பவையு ளன்றோ. 755 அந்தப் பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன் . நீ என் பக்தனும் தோழனு மென்பது கருதி, இது மிகவும் உயர்ந்த ரகசியம். அர்ஜுன உவாச : o o - அபரம் பவதோ ஜன்ம பரம் ஜன்ம விவஸ்வத: கதமேதத் விஜானியாம் த்வமாதெள ப்ரோக்தவன்னிதி 4. பிந்தி யாயது நின்பி றப்புமுன் பேவி வச்சுவ தன்பிறந்தது முந்தி யோதினை நீயெனும் மிதை முன்னு கிற்பது மெந்தவாறுகாண் 755

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/94&oldid=799976" இலிருந்து மீள்விக்கப்பட்டது