பக்கம்:கீதைப்பாட்டு.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. கீதைப் பாட்டு அர்ஜூனன் சொல்லுகிறான்: உன் பிறப்புப் பிந்தியது விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. நீ இதை ஆதியில் சொன்னவனென்று நான் தெரிந்து கொள்வதெப்படி? புரு பகவானுவாச : பஹ9னி மே வ்யத்தானி ஜன்மானி தவ சார்ஜூன தான்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப 5. உன்னொப்ப வெனக்கு மநேக சென்மம் ஒழிவுற் றன.மற் றவையா வையும் யான் நன்னர்த்தெரி வுற்றன iையறியாய் நல்லர்ச் சுன்னான பரந்தபனே. 757 பரீ பகவான் சொல்லுகிறான்அர்ஜூனா எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன. உனக்கும் அப்படியே பரந்தபா. நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை. அஜோSபி லன்-னவ்யயாத்மா பூதானா-மீச்வரோsபிலன் ட்ரக்ருதிம் ஸ்வா-மதிஷ்ட்டாய லம்பவாம் - யாத்மமாயயா 6. பிறவா துளனா கியுநாச மிலாப் பெற்றிக்க னிருப்பவ னாயுமுயிர்க் கிறையா யுளனா கியுமென் னியல்பேய்த் தென்றன்னுணர்வா லுதயம் புரிவேன். 168 பிறப்பேற்ற னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன். யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்-ப்பவதி பாரத அப்ப்யுத்தான-மதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் 7. எவ்வெக் காலத்திற் றன்மத் திற்குத் தளர் வெய்தும், பாவத்திற் கேற்றமுன் டாகுறும் அவ்வக் காலத்தில் யானேயென் றன்னையிங் கவத ரிப்பிக்கின் றேனொரு பாரத Woo பாரதா எப்போதெப்போது தர்மம் அழிந்துபோய் அதர்மம் எழுச்சி பெறுமோ அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/95&oldid=799977" இலிருந்து மீள்விக்கப்பட்டது