பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 கீதை காட்டும் பாதை வியாச பகவானால் ஏற்கனவே ஞானக் கண் பெற்ற சஞ்சயன், அர்ச்சுனன், புதிதாக ஞானக் கண் பெற்றுப் பார்த்த காட்சிகளையும் பார்த்து திருதராட் டிரனுக்கு விளக்கிச் சொல்லுகிறான். கண்ணன் அருளினால் அர்ச்சுனன் கண்ட காட்சிகள், வியாசர் அருளால் ஞானக் கண் பெற்ற சஞ்சயனுக்கும் தெரிந்து அதை அவன் திருதராட்டிர னுக்கு எடுத்துச் சொல்லுகிறான். இந்த இரண்டு பேரும் தவிர வேறு யாரும் கடவுள் வடிவத்தைக் கண்டதில்லை என்று கூறலாம். இனி அர்ச்சுனனுக்குக் கண்ணன் காட்டிய கடவுள் வடிவம் எப்படிப் பட்டது என்று சஞ்சயன் திருதராட்டிரனுக்குச் சொல்லுவதைப் பின்வரும் சுலோகங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அவ்வடிவம் பல வாய்களும் பல விழிகளுமுடையது. பல அற்புதக் காட்சிகளுடையது. பல திவ்யாபரணங்கள் பூண்டது. பல தெய்விகப் படைகள் ஏந்தியது. - கீதை 11 : 1.0 அர்ச்சுனன் சொல்கிறான்: தேவனே, நின் உடலில் எல்லாத் தேவர்களையும் காண்கி றேன். பூத வகைகளின் தொகுதிகளைக் காண்கிறேன். தாமரை மலரில் வீற்றிருக்கும் ஈசனாகிய பிரமனையும், எல்லா ரிஷிகளையும் தேவ ஸர்ப்பங்களையும் இங்கு காண்கிறேன். -கீதை 11 : 1.5 பல தோளும், பல வயிறும், பல வாயும், பல விழிகளு முடைய எல்லையற்ற வடிவிலே நின்னை எங்கனும் காணுகி