பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் பேருருவம் 95 றேன். எல்லாவற்றுக்கும் ஈசனே, எல்லாந் தன் வடிவாகக் கொண்டவனே, உனக்கு முடிவேனும், இடையேனும், தொடக்கமேனும் காண்கிலேன். -கீதை 11 : 16 ஏற்கெனவே தான் எல்லாரையும் கொன்று முடித்து விட்டதாகவும், அர்ச்சுனன் இனிமேல் போர் புரிந்து கொல்லப் போவது கண்ணன் முடித்துவிட்ட செயலை வெளிக் காரணமாக நடத்திக் காட்டத்தான் என்றும், ஆகையால் உன் குலத் தொழிலைச் செய், அதாவது போர் செய் என்றும் கண்ணன் கூறுகிறான். அர்ச்சுனன் மெய் நடுங்குகிறான். தேவ தேவ னாகிய ஒருவனை அதுவரை தோழன் என்று கருதிசெய்த செயல்களை மன்னிக்கும்படி கேட்டுக் கொள் கிறான். கண்ணனுடைய தெய்வ வடிவத்தைக் காண விரும்பிய அர்ச்சுனன் அந்தக் கோர வடிவத்தைக் கண்டு அஞ்சிச் சோர்ந்து, பார்த்தது போதும் என்று கலங்கி மானிட வடிவத்தை மீண்டும் எடுக்கும்படி வேண்டுகிறான். இப்படிப்பட்ட என் கோர வடிவத்தைக் கண்டு கலங் காதே! மயங்காதே! அச்சம் நீங்கி இன்புற்ற மனத்துடன் என் முன்னை வடிவத்தைப் பார். --கீதை 11 : 49 இப்போது அர்ச்சுனன் கண்ணன் தான் எல்லா மாகிய கடவுள் என்பதை உணர்ந்து அவன் பக்த னாகி விடுகிறான்,