பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கீதை காட்டும் பாதை பக்தனாகி விட்ட அர்ச்சுனனுக்கு கண்ணன் சொல்லுகிறான். என்னை நீ கண்டபடி இவ்விதமாக வேதங்களாலும் தவத்தாலும், தானத்தாலும், வேள்விகளாலும் காண இயலாது. - கீதை 11 : 53 வேதங்களாலும், வேள்விகளாலும் 凸G厂6öT முடியாத இந்தப் பயங்கரக் காட்சியை, அர்ச்சுனன் மட்டும் காண என்ன தகுதி பெற்றிருந்தான் என்பதை அவன் சொல்ல வில்லை. ஆனால், யாரால் பார்க்க முடியும் என்பதை அடுத்த சுலோகத்தில் சொல்லுகிறான். பிறிதிடம் செல்லாத பக்தியால் மாத்திரமே என்னை இவ்விதமாக அறிதலும், உள்ளபடி காணுதலும், என்னுள் புகுதலும் இயலும். -கீதை 11 : 54 அர்ச்சுனன் இப்போது முழுக்க முழுக்க, கிருஷ்ண பக்தன் ஆகிவிட்டான். அவனுக்கு பக்தியின் பெருமையைக் கண்ணன் பலவிதமாக எடுத்துக் கூறுகிறான். பக்தர்களின் சிறந்த பண்புகளை எல்லாம் எடுத்துக் கூறுகிறான். சமநோக்கு உள்ளவனே சிறந்த பக்தன் என் கிறான்.