பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 பிரிவுகளும் பாவங்களும் மனிதர்களை அவர்கள் குணங்களைக் கொண்டு மூன்று விதமாகப் பிரிக்கிறான். சத்வம் ரஜஸ் தமஸ் என்று இந்தக் குணங்களுக்குப் பெயர் சூட்டுகிறான். சத்வம் என்பது ஞானத்தால் ஒளி பெறுவது. ரஜஸ் குணம் என்பது அவாவினால் துன்பம் அடைவது. தாமச குணம் சோம்பலால்-அஞ்ஞானத்தால் மயக்க மடைவது. இந்த மூன்று குணங்களையும் கடந்து, பிறப்பு, சாவு, மூப்பு, வருத்தம் ஆகியவற்றிலிருந்து விடுபட் டோன் அமிர்த நிலை அடைகிறான். அவனுக்குப் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை. இந்த வேறுபாடுகள் இல்லாத பக்தன் பிரமத் தன்மை அடைகிறான்.