பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவுகளும் பாவகிகளும் 99 அந்தப் பிரமம் நானே என்று கண்ணன் தன் னைப் பெரிய கடவுளாக அறிமுகப் படுத்துகிறான். ஒருவன் தொழில் செய்வதற்கு ஒரு கட்டுப் பாட்டை விதித்திருக்கிறான் கீதைக் கண்ணன். சாஸ்திர விதியை மீறி, விருப்பத்தால் தொழில் புரி வோன் சித்தி பெறான். அவன் இன்ப மெய்தான். பரகதி யடையான். - கீதை 16 : 23 ஆதலால் எது செய்யத் தக்கது. எது செய்யத் தகாதது என்று நிச்சயிப்பதில் நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள். அதை யறிந்து சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலைச் செய்யக் கடவாய். -கீதை 16 : 24 இப்படி ஒரு கட்டுப்பாடு விதித்து விட்டால், நான்கு வர்ணங்களையும் கட்டிக் காக்க முடியும். அவனவன் குலத் தொழில் என்ற போர்வையில் எவனும் முன்னேறி விட முடியாமல் தடுத்து விட முடியும். மேலாதிக்க முடையவர்கள் கீழ் நிலையில் உள்ளவர்களை எப்போதும் அடக்கி ஆண்டு கொண்டிருக்கலாம். விடா முயற்சியும் ஊக்கமும் கொண்டவர்கள், மேற் குலத்தாரின் தொழில்களைக் கற்றுக் கொண்டு முன்னேறி விடாமல் தடுக்க இந்த சாஸ்திர ஏற்பாடு சரியான முட்டுக் கட்டையாக இருக்கும். கீதை உபதேசம் என்ற பெயரில் கண்ணன் இங்கே நல்ல சூழ்ச்சியைக் கையாண்டிருக்கிறான்