பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 - கீதை காட்டும் பர்னித சூழ்ச்சி தொடருகிறது. மேலும் விளக்கமாகச் சொல்லுகிறான். பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தர்மத்தைக் குணமின்றிச் செய்தலும் நன்று. இயற்கையில் ஏற்பட்ட தொழிலைச் செய்வதனால் ஒருவன் பாவமடைய மாட்டான். -கீதை 18 47 இதன் பொருள் என்ன? உழுபவன் நன்றாக உழா விட்டாலும் தவறில் லை. உழுபவன் பயிற்சி பெற்று குருவாகி, குரு செய்ய வேண்டிய தொழிலை, அதாவது ஆசிரியத் தொழிலைச் சிறப்பாகச் செய்தாலும் அது பாவ மாகும். முடி வெட்டுபவன் நன்றாக வெட்டா விட்டால் தவறாகாது. அவனே, எஞ்சினியராகி, அதில் திறமையாக வேலை செய்தாலும் அது பாவமாகும். இப்படி ஒரு சாஸ்திரத்தைச் சொல்லி விட்டால், அதை மீறுபவன் நரகம் அடைவான் என்றும் எழுதி வைத்து விட்டால், எவனாவது முன்னேற நினைப்பானா? நான்கு வருணங்களையும் அவற்றிற்குரிய தொழில்களையும் கண்னன் தெளிவாகக் கூறு கிறான். பரந்தபா பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், இவர்களுடைய தொழில்கள் அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின் படி வகுப்புற்றனவாம். -கீதை 18 : 41