பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவுகளும் பாவங்களும் 通ö量 அகக் கரணத்தை அடக்குதல். புறக் கரணத்தை யடக்கு தல். தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம், கல்வி, ஆஸ்திகம்-இவை இயல்பிலே தோன்றும் பிராமண கர்மங் களாம். -கீதை 18 : 42 சூரத் தன்மை, ஒளி, உறுதி, திறமை, போரில் புறக்காட் டாமை, ஈகை, இறைமை-இவை இயற்கையிலே தோன்றும் சத்திரிய குணங்களாம். - கீதை 18 : 43 உழவு, பகக் காத்தல், வாணிகம், இவை இயற்கையிலே பிறக்கும் வைசிய கர்மங்களாம். தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையால் ஏற்பட்ட தொழில். -கீதை 18 : 44 இவ்வளவும் கூறி அர்ச்சுனனை அவனுடைய தொழிலான போரைச் செய்யும்படி அறிவுரை கூறு கிறான் கண்ணன். அப்படிப் போர் செய்யும் போது கண்ணன் அருளால் எல்லாத் தடைகளையும் கடந்து செல்வான் என்று உறுதி கூறுகிறான். கண்ணன் பேச்சைக் கேளாமல், அகங்காரத்தால் மறுப்பா னாகில் பெரிய நாசத்தை அடைவான் என்றும் பயமுறுத்துகிறான். அப்படி மீறிப் போர் புரியாமல் இருக்க முயன் றாலும், இயற்கை அவனைப் போர் செய்ய இழுத் துச் செல்லும் என்றும், அதிலிருந்து தப்ப முடியாது: என்றும் எச்சரிக்கிறான். கடைசியாக ஒரு கருத்தைக் கொல்கிறான்: எல்லா அறங்களையும் விட்டுவிட்டு என்னயே சரன் புகு, எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக் கிறேன். துயரப் படாதே. -கீதை 18 38