பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கீதை காட்டும் பாதை பக்தியிருந்தால் போதும் அறச் செயல் செய்ய வேண்டியதில்லை. பாவங்கள் விலகிவிடும். இப்படிப்பட்ட கருத்து நாட்டில் எத்தனை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று வரை சமயத் தலைவர்கள் என்போர் பக்தியை வளர்க்கிறோம் என்ற பெயரால், நாட்டில் பரப்பி வருகின்ற கீதைகள், புராணங்கள், இதிகாசங் கள், சொற்பொழிவுகள், கருத்துரைகள் எல்லாம் மனிதனைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்லு கின்றன என்பதை அந்தக் கதைகளைப் படித்தாலே புரியும். தொன்று தொட்டு நாட்டைக் குட்டிச் சுவராக்கி வருகின்ற இந்தக் கதைகள் - புராணங்கள், மனித குலத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் எவ் வளவு தூரம் பாதித்திருக்கின்றன என்று எண்ணிப் பார்த்தால் நல்லவர்களின் இதயங்கள் வெடித்து விடும். கீதை-நாகரிக மனப்பான்மைக்கு வேட்டு வைக்கும் நூல். கடவுள் பக்தி என்ற பெயரால் மனித குலத்தை வேறு படுத்திக் கூறுபடுத்தி ஊறு படுத்தும் ஒரு கருவியாகவே உள்ளது என்பதை உணரலாம்.