பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|#ồ கீதை காட்டும் பாதை தெய்வத் தன்மையை உணர்ந்தது போலப் பேச வில்லை. கடைசியில் பத்தாவது அத்தியாய முடிவில் தான், அவன் முழுமையாக உணர்ந்து கொண்ட தாகப் பேசுகிறான். இரண்டாவது அத்தியாயத்தில் கண்ணன் குறிப்பாகத் தன் தெய்வத் தன்மையை உணர்த்தத் தொடங்குகிறான். இந்திரியங்களை எல்லாம் அடக்கி, யோகத்தில் அமர்ந்த வனாய், என்னைப் பரமாகக் கொண்டு, புலன்களை வசப் படுத்தி வைத்திருப்பவன் எவனோ, அவனுடைய அறிவே நிலை கொண்டது. கீதை 2 : 51 இங்கேதான் தான் பரம்பொருள் என்பதை கீதையில் முதன் முதலாகக் குறிப்பிடுகிறான். பிரமஸ்திதி என்பதாக ஒரு நிலையைக் குறிப் பிடுகிறான். இந்த பிரமஸ்திதியை அடைய ஆசை களையும் இன்பங்களையும் துறந்து யான் எனது என்பதை அகற்றி சாந்தி நிலை யடைவதே பிரமஸ் திதி என்கிறான். இந்த நிலையை யடைந்தவன் இறுதியில் பிரம நிர்வாணம் எய்துவான் என்கிறான். பற்றில்லாமல் தொழில் செய்து கொண்டிருப்ப வன் பரம் பொருளை எய்துகிறான் என்றும் கண்ணன் சொல்கிறான். பிரமஸ்திதி என்றும் பரம் பொருள் என்றும் படர்க்கையில் மூன்றாவது இடமாக வைத்துப் பேசிக் கொண்டிருந்த கிருஷ்ணன்,