பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுட் கொள்கை 107 தான் தொழில் செய்யா விட்டால் மக்கள் எல்லோரும் அழிந்து போவார்கள்; அதனால் சோம் பல் இல்லாமல் தான் தொடர்ந்து தொழில் செய்து கொண்டிருப்பதாகக் கூறுகிறான். இங்கு தானே பரம் பொருள் என்று சொல்லிக் காட்டுகிறான். இவ்வளவு வெளிப்படையாகப் பேசியும் அர்ச்சுனன் அவனைப் பரம் பொருளாக அறிந்து கொள்ள வில்லை. ஞான யோகத்தைத் தான் விவஸ்வானுக்குச் சொன்னதாகக் கிருஷ்ணன் கூறுகிறான். அப்போது அர்ச்சுனன் குறுக்கிட்டு, விவஸ்வான் முன்பு இருந்தவன்; நீ இப்போது பிறந்தவன். அப்படி யிருக்க நீ எப்படி விவஸ்வானுக்குக் கூற முடியும்!” என்று கேட்கிறான். அப்போது கிருஷ்ணன் மிக விளக்கமாகத் தான் தான் கடவுள் என்பதை எடுத்துச் சொல்லுகிறான். அர்ச்சுனா? எனக்குப் பல பிறப்புக்கள் கழிந்திருக்கின்றன. உனக்கும் அப்படியே. நான் அவற்றை யெல்லாம் அறிவேன். நீ அறிகிலை. -கீதை 4 : 5 பிறப்பற்றேன். எனினும், அழிவற்றேன் எனினும், உயிர் களுக்கெல்லாம் ஈசனே எனினும், யான் எனது பிரகிருதியில் நிலை பெற்று, ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன். -கீதை 4 : 6 பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்து போப் அதர்மம் எழுச்சி பெறுமோ, அப்போது நான் என்னைப் பிறப்பிக்கக் கொள்கிறேன். p #ಣ ይው -கீதை 4 : 7