பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுட் கொள்கை 109 அவற்றின் கர்மங்களுக்குத் தக்கபடி பிறப் பெய்துகின்றன. கிருஷ்ணனோ, தன்னைத்தானே தன் எண்ணப்படி பிறப்பித்துக் கொள்கிறான். இதற்கு அவனிடம் உள்ள ஆத்ம மாயை என்ற சக்தி துணை புரிகிறது. இந்த அடிப்படையில் பகவத் கீதையில் வரும் சுலோகங்களில் அவன் தன்னைப் பற்றிக் கூறும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்க்கும் போது அவனே தன் பிறப்புக்களைப் பற்றி அறியாதவனாக இருந்திருக்கிறான் என்பது தெரிகிறது. பல செய்திகளை அவன் அறியாதவனாக இருந்திருக்கிறான் என்பது புரிகிறது. யுகந்தோறும் நான் பிறக்கிறேன் என்று கூறு கிறான். அப்படியானால் அவன் பல பிறப்புக் களை - கணக்கில் அடங்காத பல பிறவிகளை அடைந்திருக்க வேண்டும். ஆனால், விஷ்ணுவாகிய அவன் மொத்தம் பத்துப் பிறப்புக்களை உடையவன் என்றும் அதில் பத்தாவது பிறப்பை இன்னும் அவன் எடுக்கவில்லை என்றும், ஒன்பதாவது பிறப்பையே கிருஷ்ணன் அடைந்திருக்கிறான் என்றும் புராணங் கள் கூறுகின்றன. புராணங்களின் கூற்றுப்படி ஒன்பதாவது பிறப்பை அடைந்துள்ள கிருஷ்ணன், முந்திய தன் பிறப்புகளைப் பற்றி அறிந்திருப்பதாக கீதையின் மூலம் அறிய முடியவில்லை. ஏனெனில் தான்