பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10 கீதை காட்டும் பாதை அடைந்த முந்திய பிறப்புகளைப் பற்றி கிருஷ்ணன் எவ்விதத் தகவலும் கொடுக்கவில்லை. ஒரே ஓர் இடத்தில் இராமனைப் பற்றிக் குறிப் பிடுகிறான். அந்த இடத்திலும் முன் தான் இராம னாகப் பிறந்ததாகக் குறிப்பிடவில்லை. ஒவ்வோர் இனத்திலும் சிறந்து விளங்கும் பொருள்கள், பறவைகள், விலங்குகள், மக்கள், தேவர், அசுரர் ஆகியவை தானே என்று அடுக்கிக் கொண்டு போகும் போது, அசுரரில் பிரகலாதன் யான் இயங்குவனவற்றில் காலம் யான் விலங்குகளில் சிங்கம் யான் பறவைகளில் கருடன் தூய்மை செய்வனவற்றுள் காற்று படை தரித்தோரில் இராமன் மீன்களில் சுறா ஆறுகளில் கங்கை என்று தன்னை, படைக்கலங்களைக் கையாளும் சிறந்த வீரனான இராமனுக்கு ஒப்பிட்டுப் பேசு கிறானே தவிர, முற்பிறப்பில் நான் இராமனாகப் பிறந்தேன் என்று குறிப்பிடவில்லை. மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரமாகக் கிருஷ்ணனைப் புராணங்கள் கூறு கின்றன.