பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 கீதை காட்டும் பாதை அதர்வண வேதம் என்று ஒன்று பின்னால் தோன்றப் போவதை அவன் அறியாத காரணத்தால் அதைக் குறிப்பிடவில்லை. பகவத் கீதை பிறந்த காலத்தில் மூன்று வேதங் களே தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்திருக் கின்றன. இந்த மூன்று வேதமாகவும் நான் இருக் கிறேன் என்று கூறுகிறான். முதல் வேதமான ரிக்கில், கிருஷ்ணனைப் பற்றி எந்த குறிப்பும் இல்லை. கிருஷ்ணனுக்கும், மற்ற அவதாரங்களுக்கும் மூலமாகப் பேசப் படுகின்ற விஷ்ணுவைப் பற்றி ரிக் கில் குறிப்பிடப் படுகிறது. ரிக்கில் விஷ்ணு பரம் பொருளாகப் பேசப்பட வில்லை. பிரம்மமாகவும் குறிப்பிடப் படவில்லை. ரிக் வேதத்தில் பிரமமம் பற்றியோ, முழுமுதற் பொருளான பரம் பொருள், பரமாத்மா என்பவை பற்றியோ எந்தச் செய்தியும் இல்லை. பிரம்மம் என்றோ, பரப்பிரம்மம் என்றோ, பரம் பொருள் என்றோ இன்று நாம் பேசுகின்ற தனிப் பெருங் கடவுள் அல்லது மூலப் பொருள் ஒன்று இருந்ததாகவோ, இருக்கிறதாகவோ, இருக்கப் போவதாகவோ, ரிக் வேத சுலோகங்களைப் பாடிய ரிஷிகள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.