பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுட் கொள்கை 113 விஷ்ணுவை தேவர்களில் ஒரு தேவனாகவே இந்த ரிக் குறிப்பிடுகிறது. ரிக்கில் அக்கினி தேவனுக்கும், இந்திரனுக்கும் தான் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவை நூற்றோடு நூற்றியொன்றாக ஒரு சாதாரணத் தேவனாகவே சித்தரிக்கப் பட்டுள்ளது. புராணங்கள் விஷ்ணு இருக்கும் இடம் வைகுண் டம் என்று கூறுகின்றன. ரிக் வேதம் இந்திரனின் உலகமே வைகுண்டம் என்று குறிப்பிடுகிறது. விஷ்ணு இந்திரனின் நண்பன் என்றும், அடிக்கடி வைகுண்டம் வருவான் என்றும், ஒரு சாதாரணத் தேவனாகவே ரிக் பேசுகிறது. ரிக் வேதத்தில் ஏராளமான சுலோகங்கள் அக்கினியைப் போற்றியே பாடுகின்றன. அடுத்த படியாக இந்திரனைப் பாடுகின்றன. விஷ்ணுவை நான்கு இடங்களில் மட்டுமே போற்றிப் பேசு கின்றன. - ரிக்கில் எந்தத் தேவனையும் சகல சக்திகளும் படைத்த மூல முழுப் பொருளாக வணங்கவில்லை. ஒவ்வொரு தேவனுக்கும் குறிப்பிட்ட சில சக்திகளைக் கூறி அந்த ஆற்றலைப் பயன்படுத்தி தங்கள் பகை வர்களான தஸ்யூக்களை ஒழித்து தங்களைக் காப் பாற்ற வேண்டும் என்று வேண்டும் சுலோகங்களே நிறைந்துள்ளன.