பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞர்கள் பாராட்டு திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ஆசிரியர் வீரமணி அண்மையில் வெளிவந்துள்ள சில நல்ல நூல்களில் இது ஒன்று. கீதையின் குழப்பங்களை மிகத் தெளிவாக விளக்கு கிறது. விறுவிறுப்பான நடை. படிக்கத் தொடங்கியதும் புத்தகம் முழுவதும் படித்து முடித்த பிறகு தான் கீழே வைக்கத் தோன்றியது. தென்மொழி ஆசிரியர் பாவலர் பெருஞ்சித்திரனார் கீதையில் உள்ள கசடுகளையும், கரவுகளையும். ஆரியச் சூழ்ச்சிகளையும் வெளிப்படுத்துகின்ற நூலாகும் இது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வி. ஐ. சுப்பிரமணியம் நேர்மையான சீர் தூக்கு. அதில் புதைந்துள்ள பல கருத்துக்களைத் தெளிவாக, முரண்பாடு எவை எவை என்று நன்கு விளக்கியுள் ளீர்கள். நடையும் தெளிவாக இருக்கிறது. இந்த நூலை இந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ வெளியிட முகல்க. பாவேந்தர்'பாரதிதாசன் மகன், கலைமாமணி மன்னர் மன்னன் துணிவான முயற்சி. யாரும் இதுவரை தொடவும் நினையாத துறையில் இறங்கி வெற்றி பெற்றுள்ளீர்கள். தமிழர்களின் தூக்கம் கலைய வேண்டும்.