பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l 14 கீதை காட்டும் பாதை இதிலிருந்து வேதம் விஷ்ணுவைப் பெருங் கடவுளாகப் போற்றவில்லை என்பதும், ரிக்காக நான் இருக்கிறேன் என்று பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறுவது பொருத்தம் இல்லை என்பதும் புரிகிறது. பரமாத்மாவாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் கிருஷ்ணன், மற்ற தெய்வங்களை வணங்குவது தவறு என்று கூறவில்லை. எந்த எந்த பக்தன் எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனவனுடைய அசையாத நம்பிக் சைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்ளுகிறேன். -கீதை 7 : 21 எந்த வடிவமுள்ள தெய்வத்தை வணங்கினாலும் அதனால், அந்த பக்தன் அடையும் நன்மையை நானே வகுத்துக் கொடுக்கிறேன் என்று கிருஷ்ணன் கூறினான். இக் கருத்தின்படி பார்த்தால், காளியை வணங்கிப் பலன் அடைபவனும், கணபதியை வணங்கிப் பலன் அடைபவனும், மதுரை வீரனை வணங்கிப் பலன் அடைபவனும் அடையும் பலனெல் லாம் கிருஷ்ணன் கொடுத்த பலனே யாகின்றன. அன்னிய தேவதைகளை நம்பிக்கையுடன் தொழும் அன்பரும், குந்தியின் மகனே, விதி வழுவி என்னையே தொழுகின்றார். . -கீதை 9 23