பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுட் கோள்கை 117 ஓரிடத்திலே பொதுப்படையான கருத்தைக் கூறுகிறான். சிலர் ஆத்மாவில் ஆத்மாவால் ஆத்மாவை அறிகிறார் கள். பிறர் சாங்கிய யோகத்தால் அறிகிறார்கள். பிறர் கர்ம யோகத்தால் அறிகிறார்கள். - கீதை 13 : 25 இங்ங்ணம் அறியாத பிறர் அன்னியரிடமிருந்து பெற்ற சுருதிகளை வழிபடுகிறார்கள். அவர்களும் அந்த கருதிகளின் படி ஒழுகுவார்களாயின் மரணத்தை வெல்வார். -கீதை 13 : 26 பிற மதத்தைத் தழுவுவதும், அம்மத நெறி களின்படி ஒழுகுவதும் தவறில்லை என்ற உன்னத மான கருத்தை இந்த சுலோகம் விளக்குகிறது. இவ்வளவு உயர்வான கருத்தைக் கூறிய அதே வாய் கீழே காணும் இழிவான கருத்தையும் கூறுகிறது. குந்தியின் மகனே, பிறப்புத்தோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம் மூடர் என்னை யெய்தாமலே மிகவும் கீழான கதியைச் சேர்கிறார்கள். -கீதை 16 : 20 இப்படியான இரண்டுங் கெட்ட முரண்பாடான பல கருத்துக்கள் கீதையிலே காணப்படுகின்றன. தன்னை உலகுக் கெல்லாம் ஒரு தெய்வமாக அறிமுகப் படுத்திக் கொள்ள விரும்பும் கிருஷ்ணன், நச்சுத்தன்மையுள்ள, முரண்பாடான, மக்களிடையே வேற்றுமையை வளர்க்கும் கருத்துக்களைக் கூறுவது கண்டிக்கத் தக்கதாகும். -