பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f is கீதை காட்டும் பாதை நடுநிலையில் இருப்பதுதான் பக்தனுக்கு இலக் கணம் என்று கூறும் இவன், தானே நடுநிலை பிறழ்ந்து பேசுவது பண்பின்பாற் பட்டதாயில்லை. தன்னுடைய பரத்துவத்தை அர்ச்சுனனுக்கு எடுத்துக் காட்ட விரும்பிய போது, தன்னுடைய பேராற்றலையும், உயர் தன்மையையும் எடுத்து விளக்கிக் காட்டி அவனை மனமாற்றம் அடையச் செய்வதை விட்டு விட்டுமாயமந்திர வித்தை அல்லது கண்கட்டு வித்தை போல விசுவ ரூப தரிசனம் என்ற ஒன்றைக் காட்டி அவனை அஞ்சி நடுங்க வைத்து தன்னை ஏற்றுக் கொள்ள வைத்த செயல் இறை யாண்மைக்கே இழுக்கான செயலாகும். மனித குலத்தில் பலரைப் பிறப்பிலேயே கடைப் பட்டவர்களாகக் காட்டுவதும், அவர்களைக் காரண மின்றி வெறுப்பதும், அசுரர்கள் என்றும், பாவிகள் என்றும், மூடர் என்றும் தரம் பிரித்துப் பார்க்கும் கீழ்த் தரமான செயல்களை ஒரு பரமாத்மா செய்வ தென்பது சிறிதும் பொருத்தமாக இல்லை. கடவுள் எப்படி யிருப்பார் என்றால், சமயத் துறையில் உள்ள அறிஞர் பெருமக்கள், பொதுப் படையான ஒரு கற்பனையை உருவாக்கியிருக் கிறார்கள். பிரமம் என்றும் பரப்பிருமம் என்றும், மூல முதல் வன் என்றும் தனிப் பெருங் கடவுள் என்றும் முழு முதல் என்றும் பேசப்படுகின்ற இந்தக் கடவுளுக்கு