பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுட் கொள்கை 119 தனிப்பட்ட உருவம் இல்லை தனிப்பட்ட நிறம் இல்லை தனிப்பட்ட குணம் இல்லை தனிப்பட்ட இடம் இல்லை தனிப்பட்ட காலம் இல்லை தனிப்பட்ட நிலை இல்லை எல்லாமாய் எங்குமாய் யாவுமாய் ஏகமாய் வல்லதாய் நல்லதாய் இருக்கும் அந்தப் பரம்பொருள். கண்ணால் காண அரியது; ஐம்புலன்களால் அறிய ஒண்ணாதது. இப்படி ஒன்று இருப்பதாகச் சொல்பவர் யாரும் இதைக் கண்டதில்லை. இப்படி ஒன்றைக் கண்ட தாக யாரும் சொன்னதில்லை. கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்று கடவுளுக்கு இலக்கணம் கூறுவர். இப்படித் தனிப்பெரும் தலைமைக் கடவுளைத் தவிர மற்ற, உருவு கொண்ட, வடிவு கொண்ட பொருள்கள் யாவும் பிள்ளை விளையாட்டுப் பொம் மைகளே என்று கூறுவர். கண்ணனோ, நான் தான் கடவுள் என்று கூறிய தோடு, தன்னுடைய விசுவ ரூபத்தைக் காட்டி அர்ச்சுனனைப் பயமுறுத்தி தன் பக்தனாக்கிக் கொண்டதாக கீதை கூறுகிறது. அப்படியே தன்னைக் காட்டிக் கொண்ட கண்ணன் அத்தனை படைகளுக்கு மத்தியிலே