பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலைக் காட்சியில் பாடம் நடத்தும் டாக்டர் மா. நன்னன் நல்ல இனிய எளிய நடையும், தூய பொருள் பொதிந்த சொல்லாட்சியும் கொண்டுள்ள தங்கள் நூல், கீதையில் உள்ள முரண் குழப்பம் ஆகிய இரண்டையும் துலக்கி நிறுவியுள்ளது. அதில் உள்ளவை வெற்றுப் பேச்சு, வெட்டி, வேதாந்தம் என்பதையும் மிக அருமையாக நிலை நாட்டப்பட்டுள்ளது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் ச. வே. சுப்பிரமணியன் ஆன்மிகவாதமே எதிரியை மடக்கத்தான் பயன்படு கிறது. வேறு வகையில் உப்புக்குக் கூடப் பயன்படுவதில்லை. (பக். 61) இதைப் படித்து நினைத்து நினைத்துச் சிரித்தேன்மிக நல்லபகுதி. திருக்குறளுக்கு முன்பு கீதை நிற்க முடியாது என்பதில் ஐயமில்லை. சென்னைப் பல்கலைக் கழகத் திருக்குறள் பீடத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் மு. சண்முகம்பிள்ளை "கீதை காட்டும் பாதை’ என்னும் உங்கள் நூல் பகுத்தறிவுக் கண் கொண்டு நோக்கிய நோக்கு. இதுவரை யாரும் கூறாத-கூறத் துணியாத உண்மைகளை உலகுக்கு வெளிச்சப்படுத்தியுள்ளது.