பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#26 கீதை காட்டும் பாதை பிரமன் அன்னமாக மாறி முடியைத் தேடிப் பறந்ததாகவும். சிவபெருமான் கொண்டையில் சூடியிருந்த தாழம்பூ நழுவிக் கீழே விழும்போது தடுவில் கவ்விக் கொண்டு வந்த பிரமன் தானே முதலில் முடியைக் கண்டு பிடித்ததாகக் கூறியதாகவும், பொய் சொன்னதால் அன்று முதல் பிரமனை யாரும் வணங்கக் கூடாதென்று சிவபெருமான் சாபம் இட்டு விட்டதால், பிரமனுக்குக் கோயில் கிடையாதென்றும் கூறுவார்கள். இதனால், பிரமன் முழுமுதற் கடவுள் என்ற நிலையும் போய், சாதாரணத் தேவனாகவும் வணங்கப் படாதவன் ஆகிவிட்டான். கீதையில் விசுவரூப தரிசனத்தின் போது, அர்ச்சுனன் சொல் கிறான்; 'ஈசுவரனாகிய பிரமதேவனும் உன் விசுவ ரூபத்துக்குள்ளே இருப்பதை நான் கண்டேன்' என்று. இவ்வாறாக ஒரு காலத்தில் முழுமுதற் பொருளாக மதித்து வணங்கப்பட்ட பிரமன், சைவர்களாலும், வைஷ்ணவர்களாலும், தன் முதன்மையிழந்து, கடை நிலைக்குப் போய் விட்டான். எனினும், பிரமம், பிரமஸ்திதி, பிரமயோகம் என்பவை அந்த முதன்மைப் பொருளிலேயே கீதையில் பேசப்படுகின்றன. -