பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதை காட்டும் பாதை 127 ஆனால் அந்தப் பிரம்மமாகத் தானே இருப்ப தாகக் கண்ணன் கூறிக் கொள்ளுகின்றான். பிரமனைப் பற்றிக் குறிப்பிட்ட கீதையில், மும்மூர்த்திகளில் ஒருவராகவும் சைவர்களின் முழு முதல் தனிப் பெருங் கடவுளாகவும் விளங்கிய சிவ பெருமானைப் பற்றி ஒரு குறிப்புக் கூடக் காணப் படவில்லை. கீதையில் அன்னிய மதம் என்றும், அன்னிய சுருதி என்றும் குறிப்பிடப்படுபவை சைவமாகவோ, பெளத்தமாகவோ இருக்கக் கூடும். பார்த்தனாகிய அர்ச்சுனனுக்கு பாசுபதம் என்ற அம்பை வழங்கிய சிவபெருமானைப் பற்றிக் குறிப் பிடாததற்கு - அப்படி ஒரு தெய்வம் இருப்பதாகக் காட்டாமைக்கு - பெருஞ் செல்வாக்குடன் விளங்கிய மற்றொரு கடவுளைப் பற்றிப் பேசினால், தான் முழுமுதற் கடவுளாக விளம்பரப் படுத்திக் கொள்வது பாதிக்கப்படலாம் என்று கண்ணன் கருதியது காரணமாக இருக்கலாம். எப்படியிருந்தாலும் தன்னைப் பரம் பொருளாக கண்ணன் - சரியாக - வலுவாக அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு கீதையில், பிதிர்க்களை வழிபடுவோர் பிதிர்க்களை அடைகிறார்கள், தேவர்களை ஆராதிப்போர் அந்த அந்தத் தேவர்களை அடை கிறார்கள். பூதங்களை வேண்டுவோர் பூதங்களை