பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதை காட்டும் பாதை 129 கடவுள் எங்கும் இருக்கிறார் என்ற கொள்கையை - தானே கடவுள், என்பதால், தான் எங்கும் எதிலும், எல்லாவற்றிலும் இருப்பதாகக் கூறுகிறான். அடுத்த நொடியிலேயே ஒவ்வொரு இனத்திலுந் தலைமையாக உள்ள ஒன்றாகத் தான் விளங்குவ தாக அறிவிக்கிறான். ஆதித்தர்களில் நான் விஷ்ணு. நட்சத்திரங்களில் சந்திரன். வேதங்களில் நான் சாமம். மாதங்களில் நான் மார்கழி. இப்படி ஒவ்வொன்றிலும் சிறந்ததாகத் தன்னைக் கூறிக் கொள்கிறான். ருத்திரர்களின் சங்கரன், அரக்கர்களில் குபேரன், வசுக்களில் தீ, மலைகளில் மேரு, என்றெல்லாம் தன்னை உயர்ந்த பொருளாகக் காட்டிப் பெருமைப் படுகிறான். எல்லா உயிர்களிலும் இருப்பதாகக் கூறிக் கொள்பவன், அவற்றில் சிறந்ததாகத் தன்னை வருணித்துக் கொள்வது - பெருமையைக் காட்டு கிறதே தவிர முழுமையைக் காட்டவில்லை! இதை அவன் உணரவில்லை.