பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 கீதை காட்டும் பாதை அசுரத்தன்மை கொண்டோர், தொழில் இயல்பையும் வீட்டியல்பையும் அறியார். தூய்மை யேனும் ஒழுக்க மேலும் வாய்மையேனும் அவர்களிடம் காணப்படுவதில்லை. -கீதை 16 - 7 அகங்காரத்தையும், பலத்தையும் செருக்கையும் விருப்பத்தையும், சினத்தையும் பற்றியவர்களாகிய இன்னோர், தம் உடம்புகளிலும் பிற உடம்புகளிலும் உள்ள என்னைப் பகைக்கிறார்கள். கீதை 16 : 18 இங்ங்னம் பகைக்கும் கொடியோரை-உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுர மனிதரை-நான் எப்போதும் அசுரப் பிறப்புக்களில் எறிகிறேன். - கீதை 16 : 19 பிறப்புத் தோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம் மூடர் என்னை எய்தாமலே கீழான கதியைச் சேர்கிறார்கள். - கீதை 16 : 20 இவ்வாறு வெறுப்புத் தீயைக் கக்கி, தான் தன் வெறுப்புக்கு ஆளானவர்களைப் பழிவாங்கும் செயலையும் எல்லாம் ஆன கண்ணன் கூறுவதை கீதையில் காண்கிறோம். கடைசியில் கீதாசாரியன் அர்ச்சுனனுக்கு ஒரு கட்டளை விதிக்கிறான். இதை எப்போதும் தவமிலாதோனுக்கும். பக்தியில்லா தோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும், என்பால் பொறாமையுடையோனுக்கும் சொல்லாதே! -கீதை 18 : 67 இப்படியாகக், கண்ணன் கூறிய கடவுள் கொள்கை, ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக் களோடு தன் கடவுள் தன்மைக்குப் புறம்பாக