பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதை காட்டும் பாதை 133 இவ்வாறு கூறி வலையை இழுத்து மூடி விடு கிறான் கண்ணன். புராணங்களில் பிரமன் ஏற்படுத்தியதாகக் கூறும் வருணாசிரம தருமத்தைத் தானே வகுத்ததாகக் கூறுகிறான் கண்ணன். வருணாசிரம தரும முறைப்படி இயற்கை யிலேயே அவனுக்கென்று வகுக்கப்பட்ட தொழிலைத் தான் செய்ய வேண்டும் என்கிறான் கண்ணன். இயற்கையிலேயே அவனவன் குணத்திற்கேற்ப சாஸ்திரங்கள் அவனவன் குலத் தொழிலை வகுத் திருக்கின்றன என்கிறான் கீதைக் கண்ணன். வேதம் படிப்பவர்கள் என்று பிராமண சாதியையும் வீரம் காட்டவே பிறந்தவர்கள் என்று சத்திரிய சாதியையும் வாணிபம் தொழில் செய்வதற்கென்றே வைசிய சாதியையும் இவர்களுக்கெல்லாம் தொண்டு செய்வதற் கென்றே சூத்திர சாதியையும் படைத்திருப்பதாகக் கண்ணன் கூறுகிறான். தொண்டு செய்யும் அடிமைகளாக இந்த நாட்டின் பெரும்பகுதியான மக்களைத் தான் படைத்ததாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறான் கண்ணன்.