பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதை காட்டும் பாதை 139 பாரதப் போர் நடந்தது. பாரதப் போர் ஏற்படுத்திய அழிவும், பாண்பாட்டுக் கொலையும் அன்றோடு நின்றுவிடவில்லை. இன்றும், சமய வெறியாகவும் சாதி வெறி யாகவும் நாட்டை உருக்குலைத்துக் கொண்டு நிற்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் உண்மை யுணர்ந்து கிளர்ந்து எழுந்து போராடத் தொடங்கும் போ தெல்லாம், தங்களைத் தாங்களே கடவுளின் பிரதிநிதி களாகவும், கடவுளையும் சாதியையும் சாத்திரங் களையும் காப்பாற்றும் கடமை முழுதும் தங்களுக்கே இருப்பதாகவும் கருதிக் கொண்டிருக்கும் மேட்டுக் குல மக்களால் இக்கிளர்ச்சிகள் ஒடுக்கப்படுகின்றன. துறவிகளாகவும், சாமியார்களாகவும், ஆச்சாரி யார்களாகவும், இருக்கின்ற பெருந்தலைகள் எல்லாம், சாந்தியையும் சமாதானத்தையும் பரப்பு வதற்குப் பதிலாக வெறியுணர்வை வளர்த்துவிட்டு சாதிமதக் கலவரங்களைத் தூண்டிவிடும் சதிகாரர் களாக இருப்பதையே பார்க்கிறோம். சாதியும் மதமும் ஒழிந்து விட்டால், தங்கள் சுகபோக செளபாக்கியங்கள் அனைத்தும் போய் விடுமே என்ற எண்ணத்தில், குரு பீடங்களும், அரசியல் தலைவர்களும், அவற்றைக் கட்டிக் காப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள்.