பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 - கீதை காட்டும் பாதை பிறருடைய தொழிலைக் கற்றுக் கொண்டு அதை எவ்வளவு மேலாகச் செய்தாலும், அதனால் பெரும்பலன் கிடைத்தாலும் அது உனக்குப் பிறகு பெரும் துன்பத்தையே தரும். உன்னுடைய தொழிலை நீ செய்து பலனற்றுப் போனாலும், அதனால் துன்பமே வந்தாலும், அது உனக்கு நல்லதாகும். எப்படியிருக்கிறது கருத்துரை - கடவுளாக நிற்பவர் கூறும் கருத்துரை இது! ஏன் இப்படிச் சொல்லுகிறான் கண்ணன் என்று நாம் மலைக்கும் போது - அவன் புதிரை அவிழ்த்து விடுகிறான். - நான்கு வருணங்களை நான்தான் வகுத்தேன், பிராமணர், கூடித்திரியர், வைசியர், சூத்திரர், இவர்களுடைய தொழில்கள், அவரவர் இயல்பில் விளையும் குணங்களை அடிப்படையாக வைத்துப் பிரிக்கப்பட்டன. அவனவன் தனக்கென்று வகுக்கப்பட்ட தொழிலைச் செய்ய வேண்டும். அதில் குணம் இல்லாவிட்டாலும் அதையே செய்யவேண்டும். இயல்பான தொழில் குறையுடையதாயினும் அதைக் கைவிடலாகாது. அதைச் செய்பவன் பாவமடைய மாட்டான்.