பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னன் விரித்த வலை 143 ஆனால் தன் இயல்புக்கு மாறான தொழிலைச் செய்பவன், அதிலே நல்ல பலனை அடைந்தாலும், நல்ல கதியடையமாட்டான். தன்னையே பரம்பொருள் என்றும், எல்லாம் வல்ல கடவுள் என்றும் அறிவித்துக் கொள்ளும் கண்ணன், இவ்வாறு மனித குலத்தை வேறு படுத்தி, அதிலே சூத்திரர் என்றொரு வகுப்பைப் படைத்து, அந்த சூத்திரர்கள் மற்ற மூன்று வருணத் தார்க்குத் தொண்டு புரிவதே அவர் இயற்கையால் அவருக்கேற்பட்ட தொழில் என்றும், இந்தத் தொண்டு புரியும் அடிமைத் தொழிலைப் புரிவதே அவர்கள் செய்ய வேண்டிய கர்ம யோகம் என்றும், அந்தக் கர்மயோகமே அவர் களைக் கடைத்தேற்றும் என்றும் திட்டவட்டமாகக் கூறுகிறான் கீதைக் கண்ணன். ஞான யோகத்தைப் போலவே கர்மயோகமும் சிறந்தது என்றும், கர்மயோகம், செய்பவனுக்கும் மோட்சம் நிச்சயம் கிடைக்கும் என்றும், கர்மயோகம் என்பது அவனவனுக்கு என்று விதிக்கப்பட்ட (குலத்) தொழிலைச் செய்வது என்றும், பலன் இல்லாவிட்டாலும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும்,