பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 IIIJfil 6lıIİSI அடிப்படை மகா பாரதப் போர் தொடங்க இருக்கிறது. அந்தச் சமயத்திலே அர்ச்சுனன் போரிடத் தயங்கு கிறான். கண்ணன் அவன் தயக்கத்தை நீக்க தன் திறமையால் பல கருத்துக்களை எடுத்துச் சொல்லி, அர்ச்சுனனைப் போரிட வைக்கிறான். அப்படி அவன் எடுத்துக் கூறிய கருத்துக்களே பகவத் கீதை என்ற பெயரிலே நூலாகியுள்ளது. இந்தப் பகவத் கீதை மிகுந்த கருத்துச் செறி வுள்ள நூலாகப் பலரால் எடுத்துரைக்கப்படுகிறது. மகாபாரத இதிகாசத்திலேயே மிகச் சத்தான பகுதி பகவத்கீதை தான் என்று பேசப்படுகிறது. அதே சமயம் மகாபாரத மூலத்தில் பகவத்கீதை கிடையாதென்றும், இடைச் செருகல் என்றும் கூறப் படுகிறது.