பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் விரித்த வலை 145 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சான்றோர்களின் அமுத மொழியைத் தூக்கி எறிந்து விட்டு கீதை காட்டும் வழியைப் பின்பற்றினால் இந்த வையகத்தின் முதுகெலும்பு போன்ற ஏழை மக்கள் முன்னேற முடியுமா? சாதிக் கொடுமையால் அழுத்தி வைக்கப் பட்டிருக்கும் பெருவாரியான மக்கள் முன்னேற வேண்டுமானால், இந்த கீதைக் கருத்துக்களை நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? ஆதிசங்கரர் எழுதிய சங்கர பாஷ்யத்திலும், இராமாநுஜரின் பாஷ்யத்திலும், இந்தக் கண்ணன் கருத்துக்கு விரிவான விளக்கம் எழுதப் பட்டிருக் கிறதே தவிர, இது தவறு மனித - குல முன்னேற்றத்துக்கு ஒவ்வாதது என்று மறுத்துரைக்கப்பட்டிருக்கிறதா? அப்படியானால் ஞான மார்க்கம் என்பது என்ன? ஏழை - பரம ஏழையாகவும் . பரம்பரை பரம்பரை யாகத் தொண்டு புரியும் அடிமையாகவே வாழ்ந்து மண்ணோடு மண்ணாக மக்கி மறைவது தான், கர்மயோக பலனாகவும், கண்ணன் காட்டிய வழியா கவும் ஏற்றுக் கொள்ளப்படவேண்டுமா? இதை யாராவது சிந்தித்ததுண்டா?