பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

கீதை காட்டும் பாதை

காந்தியடிகள் இக்கீதையை மிக மிகப் போற்றினார். இன்னும் சமயவாதிகள், ஆன்மிகவாதிகள் என்று கூறப்படுகின்ற பெரிய மனிதர்கள் பலர் இதைப் பாராட்டி உரைத்திருக்கிறார்கள்.

பகவத் கீதை வேத சாரம் என்று கூறுகிறவர்களும் உண்டு. இதை உபநிடதங்களின் சாரம் என்றும், கீதோபநிஷத் என்றும் போற்றுகிறார்கள்.

ஆனால் 108 உபநிடதங்களின் பட்டியலில் இது காணப்படவில்லை. மிகப் பிற்காலத்தில் தோன்றியதால் அல்லது இடைச் செருகலாய் இருப்பதால் பட்டியலில் இடம் பெறவில்லை போலும்.

கீதை மனிதர்களுக்குக் 'கண்ணன் காட்டிய வழி' என்று பாராட்டப்படுகிறது.

எட்டு அயல் மொழிகளிலும் இருபத்து நான்கு இந்திய மொழிகளிலும் இது மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

முந்நூறுக்கு மேற்பட்ட விளக்க நூல்கள் வெளிவந்துள்ளன.

ஆங்கிலத்தில் அன்னிபெசன்ட் அம்மையார் மொழி பெயர்த்திருக்கிறார்கள். வேறு பலர் மொழி பெயர்த்திருக்கிறார்கள். தமிழில் பாரதியார் மொழி பெயர்த்திருக்கிறார்.