பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் போரின் அடிப்படை | 1 மூதறிஞர் இராஜாஜியும், தன்னுடைய கருத் துரைகளோடு மொழி பெயர்த்துக் கொடுத்திருக் கிறார். சுவாமி சித்பவானந்த அவர்களும் அரிய விளக் கங்களோடு மொழி பெயர்த்திருக்கிறார். இவ்வளவு சிறப்பாகப் பேசப்படுகின்ற இந்த கீதையை- அதன் கருத்துக்களை- அவை எந்த அளவு நமக்கு வாழ்க்கைத் துணையாக உள்ளன என்பதை நாம் இப்போது ஆராயப் போகிறோம். பகவத் கீதையைப் பற்றிப் பேசுவதற்கு முன் னாலே பாரதப் போர் ஏன் ஏற்பட்டது என்பதை நாம் சுருக்கமாகத் தெரிந்து கொள்வது நல்லது. இதற்கு நாம் பாரதக் கதையை ஓரளவு தெரிந் திருக்க வேண்டும். பாரதக் கதையின் சுருக்கம் இதுதான்: பரதன் என்ற அரசன் ஆண்டதால் இந்த நாடு பாரதம் என்றும், இந்த நாட்டை ஆண்டவர் பரத குலத்தவர் என்றும் பெயர் பெற்றனர். பரதன் பரம்பரையில் குரு என்று ஓர் அரசன் வந்ததால், அவனுக்குப் பின் இந்த அரச குலம் குருகுலம் என்றும் அழைக்கப்பட்டது. இந்தக் குருகுலத்தில் பிறந்த சந்தனு என்ற அரசன், பீஷ்மன் என்ற மகனைப் பெற்றிருந்தான்.